This Article is From Feb 21, 2020

சிஏஏ-வுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட இளம் பெண்!

“நாங்கள் இந்தியாவுக்காக இருக்கின்றோம், எங்களுடைய எதிரி நாட்டினை நாங்கள் ஆதரிக்கவில்லை, எங்களுடைய முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதற்கானதேயாகும்.” என்று ஓவைசி பேசியிருந்தார்.

சிஏஏ-வுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட இளம் பெண்!

காவல்துறையினர் சர்ச்சைக்குரிய பெண்ணிடமிருந்து மைக்கை பறிக்க முற்பட்டபோது

Bengaluru:

அனைத்திந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில், இளம் பெண் ஒருவர் திடீரென மேடையேறி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியுள்ளார். உடனடியாக  அக்கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி எம்.பி., அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பறிக்க முற்பட்டார். ஆனாலும், தொடர்ந்து அந்த பெண் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினார். பின்னர் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பிடுங்கி அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். 

பின்னர் பேசிய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஓவைசி எம்.பி., அந்தப் பெண்ணிற்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

சர்ச்சைக்குரிய அந்த பெண்ணிற்குத் தான் கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்த பெண்ணை இந்தக்கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கக்கூடாது என்றும் அவர் பேசியிருந்தார். மேலும், இப்படியான நிகழ்வுகள் இந்த மேடையில் நடைபெறும் என்று முன்னரே தெரிந்திருந்தால் தான் இங்கு வந்திருக்கவே மாட்டேன் என்றும், “நாங்கள் இந்தியாவுக்காக இருக்கின்றோம், எங்களுடைய எதிரி நாட்டினை நாங்கள் ஆதரிக்கவில்லை, எங்களுடைய முழு உந்துதலும் இந்தியாவை காப்பாற்றுவதற்கானதேயாகும்.” என்று ஓவைசி பேசியிருந்தார்.

ஜே.டி.(எஸ்) கார்ப்பரேட்டர் இம்ரான் பாசா, இந்த நிகழ்வினை சீர்குலைக்க ஏதோ ஒரு போட்டிக் குழுவினால்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், அந்தப் பெண் பேச்சாளர்கள் பட்டியலில் இல்லை என்றும், இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

.