This Article is From Jan 30, 2019

"இது ஆபத்தானது" - ஃபேஸ்டைம் தவறை முதலில் கண்டறிந்த 14 வயது சிறுவன்!

ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் தவறை முதலில் கண்டறிந்தத சிறுவனின் தாய் கூறும் போது தன் மகனிடம் பேசும்போது ஐபோன், ஐபாடில் அனுமதி இல்லாமல் உரையாடலை கேட்க முடியும் என்பதாகவும், அதற்காக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு நிறைய புகார்கள் வந்ததையடுத்து ஆப்பிள் ஃபேஸ்டைமில் க்ரூப் காலிங் வசதியை ப்ளாக் செய்தது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் மிகப்பெரிய தவறு இருப்பது தெரியவந்தது. இந்த தவறை முதலில் கண்டறிந்தது அரிசோனாவில் உள்ள 14 வயது பள்ளி சிறுவன்தானாம். அந்த சிறுவனின் தாய் கூறும் போது தன் மகனிடம் பேசும்போது ஐபோன், ஐபாடில் அனுமதி இல்லாமல் உரையாடலை கேட்க முடியும் என்பதாகவும், அதற்காக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

"இது மிகவும் ஆபத்தான விஷயம்" என்று ட்விட் செய்துள்ளார். மேலும் அவருடைய மகன் ஆப்பிளின் புதிய ஐஓஎஸ்ஸில் உள்ள குறையை கண்டறிந்தார். அதனால்தான் மற்றவர்கள் அழைப்பை ஏற்பதற்கு முன்பே அடுத்தவரின் குரலை கேட்பதற்கு காரணம் என்றார். மேலும் இதனை பலமுறை சோதித்து பார்த்ததாகவும் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். 

இந்த தவறு குறித்து ஆப்பிள் நிறுவனத்துக்கு நிறைய புகார்கள் வந்ததையடுத்து ஆப்பிள் ஃபேஸ்டைமில் க்ரூப் காலிங் வசதியை ப்ளாக் செய்தது.

இது குறித்து பேசிய ஆப்பிளின் செய்தி தொடர்பாளர், "இந்த தவறை சரிசெய்து இந்த வார இறுதிக்குள் புதிய அப்டேட் வரும்" என்று அறிவித்தார்.

ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்ஸே தனது பதிவில் "ஆப்பிள் சரிசெய்யும் வரை ஃபேஸ்டைம் பயன்படுத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

jqi80s9

ஐபோனில் ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் ஒருவர் அழைத்தால் மறுமுனையில் இருப்பவர் அழைப்பை ஏற்கும் முன்பே அவர்களால் மற்றவர் பேசுவதை கேட்க முடியும் என்ற தவறோடு லேட்டஸ்ட் அப்டேட் ஆப்பிள் போன்களில் வெளியானது.

2019ம் ஆண்டில் டிசம்பர் 2018 அன்று முடிந்த முதல் காலிறுதி முடிவுகளை அறிவித்ததும் அதில் 84.3 பில்லியன் வருவாய் ஈட்டியதாகவும், சென்ற ஆண்டைவிட  5 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

"எங்களுடைய வருவாயில் இழப்பு ஏற்பட்டது வருத்தம் தான் என்றாலும், வர்த்தம் விரிவடைவதை எண்ணி திருப்தி அடைகிறோம்" என்று ஆப்பிள் சிஇஓ டிம் குக் கூறியுள்ளார்.

.