பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது நடவடிக்கை பாய்ந்தது! (Representational)
Manama, Bahrain: பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது, வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாகவும், மத அடையாளத்தை பகிரமங்கமாக அவமதித்ததாவகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியட்டுள்ள அறிக்கையில், சமூகவலைதளங்களில் பரவிய அந்த வீடியோ குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தலைநகர் மனாமாவில் உள்ள ஜூஃபைர் பகுதியில் ஒரு கடையில் உள்ள மத சிலைகளை வேண்டுமென்றே 54 வயது பெண் ஒருவர் உடைப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் பின்னர், சிறிது நேரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், அந்த பெண் சிலைகளை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பல குற்றவியல் சேதங்களை விளைவித்ததாகவும், மத அடையாளத்தை அவமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.
தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், கடை ஒன்றில் இந்து கடவுகள் சிலைகளுக்கு அருகே நிற்கும் இரண்டு பெண்களில் ஒருவர், அந்த சிலைகளை தூக்கி வீசி சேதப்படுத்துகிறார்.
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது.
பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுரவு அமைச்சருமான காலித் அல் கலீஃபா, அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துள்ளார்.
மத அடையாளங்களை மீறுவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல, அது குற்றமாகும்.. வெறுப்பை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்படாது.
பஹ்ரைனில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்களை சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆசியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பஹ்ரைனில் பணிபுரிந்து வருகின்றனர்.