Read in English
This Article is From Jul 16, 2019

ஆள் உயர ஜெல்லி மீன்… அதிசயத்தை ஆழ்கடலில் பார்த்த பெண்! #Video

பாரல் ஜெல்லி மீன்கள், பிறக்கும்போது ஒரு மில்லி மீட்டர் அளவு உயரம்தான் இருக்குமாம்.

Advertisement
விசித்திரம் (c) 2019 The Washington PostEdited by

தொட்டியில் வைத்து வளர்க்கும் பாரல் ஜெல்லி மீன்கள், இவ்வளவு பெரியதாக வளர வாய்ப்பில்லை என்றும் இவ்வளவு பெரிய ஜெல்லி மீன்களைப் பார்ப்பது உண்மையில் அதிசயம்தான் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

லிஸ்ஸி டாலி என்கின்ற உயிரியல் நிபுணர், பிரிட்டனில் உள்ள கடற்கரைக்குப் பக்கத்தில் ஆழ்கடல் டைவிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆள் உயர ஜெல்லி மீன் ஒன்றைப் பார்த்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி தற்போது, பலரை அதிசயத்தில் ஆழ்த்தி வருகிறது.

டாலியுடன் சேர்ந்து அவரது நண்பரான அபாட்டும் டைவிங்கில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று, மிகவும் அதிசயமான பாரல் ஜெல்லி மீன் ஒன்றைப் பார்த்துள்ளனர். மிகவும் ஆச்சரியத்திற்குரிய நிகழ்வு இது என்பதை உணர்ந்த அபாட், ஜெல்லி மீனை வீடியோ எடுத்தார். அப்போது டாலி, ஜெல்லி மீனுக்குப் பக்கத்திலேயே நீந்தியுள்ளார். 

“நாங்கள் எதையும் எதிர்பார்த்து டைவிங்கில் ஈடுபடவில்லை. திடீரென்று கிடைத்த அந்த அனுபவம் அலாதியானது” என்று பூரிக்கிறார் டாலி.

Advertisement

அபாட்டோ, “ஜெல்லி மீனைப் பார்த்தவுடன் எனது முதல் ரியாக்‌ஷன், ஆச்சரியம். காரணம், இவ்வளவு பெரிய ஜெல்லி மீனைப் பார்த்ததேயில்லை. மிகவும் அழகாக, சாந்தமான, மெதுவாக நகரும் அந்த அசாத்திய உயிரனத்தைப் படம்பிடித்தது மகிழ்ச்சி” என்று ஆனந்தப்படுகிறார். 

  .  

பாரல் ஜெல்லி மீன்கள், பிறக்கும்போது ஒரு மில்லி மீட்டர் அளவு உயரம்தான் இருக்குமாம். அவை, தொடர்ந்து வளர்ந்து ஆள் உயரத்துக்கு வருமாம். தொட்டியில் வைத்து வளர்க்கும் பாரல் ஜெல்லி மீன்கள், இவ்வளவு பெரியதாக வளர வாய்ப்பில்லை என்றும் இவ்வளவு பெரிய ஜெல்லி மீன்களைப் பார்ப்பது உண்மையில் அதிசயம்தான் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். 

Advertisement

பாரல் ஜெல்லி மீனைப் பார்த்து, படம்பிடித்த மொத்த அனுபவம் குறித்து முடிவாக டாலி சொல்கையில், “நான், அவ்வளவு பெரிய ஜெல்லி மீனைப் பார்த்து எந்த பயமும் கொள்ளவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த வீடியோவைப் பார்க்கும் பலர், கடலுக்கு அடியில் டைவிங் செய்ய விரும்புவார்கள் என்று நம்புகிறேன். கடலுக்கு அடியில் டைவிங் செய்து என்ன இருக்கிறது என்பதை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்” என்று நம்பிக்கைத் ததும்ப சொன்னார். 

Advertisement



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement