உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Banda: உத்திரபிரதேச மாநிலத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 4 குழந்தைகளுக்கும் தனக்கும் தீ வைத்து கொண்டுள்ளார். முதலில் 4 குழந்தைகளின் கை, கால்களையும் கட்டி தீ வைத்த அவர் பின்னர், தன் மீதும் தீ வைத்து கொண்டுள்ளார். இதில் 3 குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர். ஒரு குழந்தை மட்டும் உயிருக்கு போராடி வருவதாக போலீசார் கூறினர்.
நேற்று மதியம் ஹாமீர்பூர் மாவட்டத்தில் அமஹாவ் கிராமத்தில் ராத் காவல்நிலையம் அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து ஹாமீர்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹெம்ராஜ் மீனா கூறுகையில், பிரேம்வதி (28) என்ற பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தைகள் சப்னா (7), பிரஷாந்த் (5), சினேகா (3), திவ்யான்ஷ் (1) மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பிறகு தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 1 வயது குழந்தை திவ்யான்ஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான். சிறுமி சப்னா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதேபோல், சிகிச்சை பெற்று வந்த சினேகா, பிரேம்வதியும் உயிரிழந்தனர். தொடர்ந்து சிறுவன் பிரஷாந்த் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான் என்றார். மேலும், உயரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.