பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரின் சகோதரன் தூப்பக்கியால் சுட்டார்.
Muzaffarnagar: உத்தரபிரதேச மாநிலத்தின் மாநிலத்தின் ஷாமலி மாவட்டத்தில், 26 வயதான பெண் ஒருவர் தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த சம்பவம், அந்த பெண் வேலைக்காக வெளியே சென்ற போது ராம்டா கிராமம் அருகே நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதியின் வட்ட அதிகாரி ராஜேஷ் திவாரி, பாதிக்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திருமணமாகி சில நாட்களே ஆகியுள்ளது. அவர்களது திருமணத்தில் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் அவருடைய உடல்நிலை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெண்ணின் சகோதரனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.