This Article is From Nov 25, 2018

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி: இந்த திருடிக்கு என்ன ஆச்சு தெரியுமா...?

‘அப்பெண்ணுக்கு அது தேவைதான்’ என்று சிலர் கூறிய நிலையில் ஒருவர் ‘திருடும்பொது அப்பெண்ணின் புகைப்படம் கிடைத்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்

திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி: இந்த திருடிக்கு என்ன ஆச்சு தெரியுமா...?

அமெரிக்காவில் உள்ள புளொரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஷேல்லி என்பவர், பொருள்ளொன்றை ஆன் லைன் மூலம் ஆர்டர் பண்ணி வாங்கியுள்ளார். அந்தப் பொருள் அவரின் வீட்டின் வாசலிலே டெலிவரி செய்யப்பட்டிருந்தது. சற்றும் எதிர்பாராமல் பெண்ணொருவர் வீட்டின் வாசலில் இருந்த பெட்டியை திருடிச் சென்றுள்ளார்.

வீட்டின் முன்னே வைத்திருந்த பெட்டியை எடுத்துச் சென்ற பெண் சில வீடுகள் தள்ளிச்சென்று அதை திறந்து பார்த்தார், திருட வந்த பெண்ணுக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெட்டி நிறைய புழுக்களை பார்த்த அப்பெண் பயந்தடித்து ஓடிச்சென்றார்.

இக்காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. உண்மையென்ன என்று விசாரித்த போது பெட்டியின் உரிமையாளரான ஷேல்லி தனது மகன் வளர்க்கும் பியேர்டட் டிரேகன் என்னும் பல்லி வகையைச் சேர்ந்த உயிரினத்தை செல்லபிராணியாக வளர்த்து வந்த நிலையில் அதற்கு உணவாக ஒரு பெட்டி நிறைய புழுக்களை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 
 

 

கேமராக்களில் பதிவான காட்சிகள் முகநூல் மூலம் இணையத்தில் பகிறப்பட்டது. பகிறப்பட்ட சில நிமிடங்களிலே லைக்குகள் குவிந்த நிலையில் பலர் தங்களின் கருத்துக்களையும் அதில் பதிவிட்டனர்.

‘அப்பெண்ணுக்கு அது தேவைதான்' என்று சிலர் கூறிய நிலையில் ஒருவர் ‘திருடும்பொது அப்பெண்ணின் புகைப்படம் கிடைத்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவத்தைப் போல் புளொரிடாவில் சில மாதங்களுக்கு முன் கடையில் திருட வந்த நபர் ஒருவர் தலையில் இடித்துக்கொண்டதால் பணப்பெட்டியை கீழே போட்டது அங்கிருந்த மக்களை சிரிப்பில் ஆழ்த்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.