விசைப்பலகையில் வா, விளையாடு, பார், பூங்கா என்று 29 சொற்களுக்கு பட்டன்கள் உள்ளன. ச்
சாண்டியாகோவில் வசிக்கும் ஸ்டெல்லா ஒரு நாயாக இருக்கலாம். ஆனால், அதற்கு மனிதர்களுடன் எப்படிதொடர் கொள்ளவேண்டும் என்பது தெரியும். ஸ்டெல்லா என்ற நாய் அவரது உரிமையாளரான கிறிஸ்டினா ஹங்கருடன் வசித்து வருகிறது. அவர் தன்னுடைய நாய்க்காக தனியாக உருவாக்கப்பட்ட விசைப்பலகையின் மூலம் பேச பயிற்சியளித்துள்ளார். விசைப்பலகையில் வா, விளையாடு, பார், பூங்கா என்று 29 சொற்களுக்கு பட்டன்கள் உள்ளன.
நாய் தன்னுடைய விருப்பங்களைத் தெரிவிக்க தொடர்புடைய பட்டன்களை அழுத்தி தெரிவிக்கிறது. சில நேரங்களில் தொடர்புடைய வார்த்தைகளை தொடர்ந்து அழுத்தி வாக்கியமாக பேச முயல்கிறது. இந்த நாய் அற்புதமான தகவல் தொடர்பு திறமைக்காக இணையத்தில் பிரபலமாகி விட்டது.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அவரது வீடியோவினை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். ஒரு வீடியோவில் ஸ்டெல்லா ‘பார்' என்ற பொத்தானை தீவிரமாக அழுத்துவதை பார்க்கலாம். வெளியில் கேட்ட ஏதோவொரு சத்தத்தை என்ன என்று விசாரிக்க உரிமையாளரை கோருகிறது.
ஆன்லைனில் வீடியோவினை பார்த்தவர்கள் “பேசும் நாயான ஸ்டெல்லாவை நேசிப்பதாக” கூறியுள்ளனர். சிலர் “திஸ் இஸ் கூல்” என்று தெரிவித்துள்ளனர்.
ஸ்டெல்லாவின் உரிமையாளர் கிறிஸ்டினா தன்னுடைய நாய் வெளியில் இருப்பதையே அதிகம் விரும்புவதாக சிஎன்என் உடனான பேட்டியில் கூறினார்.