This Article is From Jul 13, 2018

குழந்தை கடத்துபவர் என்று சந்தேகத்தில் மதரையில் பெண் மீது தாக்குதல்!

மதுரை, மேலூரில் வட இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை, குழந்தை கடுத்துபவர் என்று சந்தேகப்பட்ட உள்ளூர்காரர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்

குழந்தை கடத்துபவர் என்று சந்தேகத்தில் மதரையில் பெண் மீது தாக்குதல்!
Madurai:

மதுரை, மேலூரில் வட இந்தியாவைச் சேர்ந்த பெண்ணை, குழந்தை கடுத்துபவர் என்று சந்தேகப்பட்ட உள்ளூர்காரர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

மேலூரில் இருக்கும் பதினெட்டான்குடி என்ற ஊரில் இரண்டு வட இந்தியப் பெண்கள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் சுற்றித் திரிந்துள்ளனர். சமீப காலமாக குழந்தை கடத்துபவர்கள் தமிழகத்தில் அதிகமாக உலவி வருகின்றனர் என்று தகவலால், இரண்டு பெண்கள் மீதும் சந்தேகப்பட்டுள்ளனர் உள்ளூர் மக்கள். கையில் பிஸ்கட் பாக்கெட் வைத்திருந்ததால், இந்த சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பெண்ணைப் பிடித்து உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்துள்ளனர்.

இது குறித்து போலீஸுக்குத் தகவல் சென்றுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், பெண்ணை ஊர் மக்களிடமிருந்து மீட்டு மேலூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். 

தாக்கப்பட்டவருடன் இருந்த இன்னொரு வட இந்தியப் பெண், எஸ்கேப் ஆகியுள்ளார். அவரைத் தேடும் பணியை போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது. பலமான காயம் ஏற்பட்டுள்ளதால், இதுவரை தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிடமிருந்து எந்த வித தகவலும் வாங்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும், குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகத்தில் தொடர்ந்து பலரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சில சம்பவங்களில் தாக்கப்பட்ட நபர்கள் இறந்ததும் நடந்துள்ளன. 

இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பட்டு வரும் வதந்திகள் தான். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சமூக ஊடக நிறுவனங்களுக்கு, ‘வதந்திகளைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுங்கள்’ என்று மத்திய அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வேலூரிலும், ஜூலை 1 ஆம் தேதி சென்னையிலும், குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்துள்ளன.

.