Read in English
This Article is From Jul 23, 2019

உடல் நலம் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை 4-வது மாடியில் இருந்து வீசிய தாய்!!

சிசிடிவியில் குழந்தை வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

உயிரிழந்த குழந்தை மஞ்சள் காமாலை நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.

Lucknow:

மகனின் உடல்நல பாதிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான தாய் ஒருவர் தனது 3 மாத குழந்தையை 4-வது மாடியில் இருந்து வீசியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 4-வது 3 மாத ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

திடீரென்று அந்தக் குழந்தை மாயமானதை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் அதனை தேட தொடங்கினர். குழந்தையின் தாய் ஊழியர்கள் திருடிவிட்டதாக கத்திக் கொண்டிருந்தார். இதன்பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டதில் தாய்தான் தனது குழந்தையை வீசியது தெரியவந்தது. 

இதையடுத்து தாயை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். உயிரிழந்த குழந்தை மஞ்சள் காமாலை நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அதன் கல்லீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டு விட்டது என்றும், குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்றும் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் விரக்தியடைந்த தாய் குழந்தையை வீசி எறிந்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement