This Article is From Mar 25, 2019

சாத்தானிடமிருந்து 'பாதுகாக்க' சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர் கைது

சாத்தான்களிடமிருந்து பாதுகாக்க அவளை சங்கிலியால் பூட்டியதாகவும் அன்றாடம் அடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

சாத்தானிடமிருந்து 'பாதுகாக்க' சங்கிலியால் கட்டி வைத்து அடித்த கணவர் கைது

தன்னுடைய கணவரும், மாமியாரும் கட்டி வைத்து அடித்ததாக அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார். (Representational)

Islamabad:

பாகிஸ்தானில்  பெண்ணொருவரை சங்கிலியால் கட்டிப் போட்டுப்பல வாரங்களாக தன் கணவனால் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தவரை காவல்துறை காப்பாற்றியுள்ளது. சாக்வால் நகரில் தன் கணவரால் 20 நாட்களுக்கு அடைத்து வைக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் என டான் அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கத்து வீட்டினர் புகார் செய்துள்ள நிலையில் நேற்று ஞாயிறு அன்று அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

டிவி காட்சிகளும் ஒரு அறைக்குள்ளே பெண்ணொருவர் கை மற்றும் கால்களில் சங்கிலியால் பூட்டப்பட்ட பெண்ணின் பாதங்களைக் காட்டியது. தன்னுடைய கணவரும், மாமியாரும் கட்டி வைத்து அடித்ததாக அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட கணவர், சாத்தான்களிடமிருந்து பாதுகாக்க அவளை சங்கிலியால் பூட்டியதாகவும் அன்றாடம் அடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.

அந்தப் பெண்ணிடமிருந்து கைக் குழந்தை உட்பட இரு குழந்தைகளையும் பிரித்துவிட்டனர். ஆரம்பத்தில் அவள் ஒரு மனநோயாளியாக இருந்ததாக கூறியதை அந்தப் பெண் நிராகரித்தார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார். விசாரணை அதிகாரியான அஃப்சல் கில் டான் செய்தி சேனலிடம் தெரிவித்த போது, திங்கள் கிழமை மாஜிஸ்திரேட்டு முன்பு நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணிற்கு மனநிலை ஆரோக்கியம் தேவை என்றும் தெரிவித்துள்ளார். அந்த குழந்தைகள் கணவனின் குடும்பத்தாரிடம் இருக்கின்றனர். 

.