Read in English
This Article is From Jan 10, 2020

போலியாக குழந்தையை உருவாக்கி நூதனமாக கடத்தலை செய்த பெண் கைது

அழகுசாதனப் பொருட்கள் தோலின் கருமையை குறைக்கும் பொருட்கள் இருக்கின்றன. அவை 2016ஆம் ஆண்டில் நாட்டால் தடை செய்யப்பட்டன.

Advertisement
விசித்திரம் Edited by

அழகு சாதனப் பொருட்களை மறைத்து கடத்த முற்பட்ட பெண்.

உகாண்டாவில் தடைசெய்யப்பட்ட அழகுசாதனப்பொருட்களை நாட்டிற்கு கடத்த போலியாக குழந்தை போன்ற உருவத்தை தயார் செய்து அதன் மூலம் கடத்த முற்பட்டவரை அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். உகாண்டா வருவாய் ஆணையத்தின் அதிகாரிகள் ட்விட்டரில் போலியான குழந்தையின் புகைப்படங்களை உருவாக்கியுள்ளார். இப்பெண்ணை காங்கோ ஜனநாயக குடியரசின் எல்லையில் ஒரு பேருந்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

உள்ளூர் செய்தி நிறுவனமான டெய்லில் மானிட்டர் படி, அதிகார சபையின் கமிஷ்னர் கார்ப்பரேட் விவகாரங்கள் இயன் ருமனிகா கூறுகையில் இந்த கடத்தல் முறை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து இந்த கைது செய்யபட்டுள்ளது. 

“சில பெண்கள் சில கடத்தல்களில் குழந்தைகளை எடுத்துச் செல்வதற்கான ஒரு அட்டையைப் பயன்படுத்துகிறார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக அழகு சாதனப் பொருட்களை மறைத்து கடத்த முற்படுகின்றனர்” என்று ருமனிகா கூறினார். 

 “ஒரு பெண் போலியாக குழந்தையை உருவாக்கி அதில் அழகுசாதனப் பொருட்களை மறைத்து வைத்திருந்த ஒருவரை கைது செய்தனர்” அந்த பெண் மபோண்டவே அமலாக்கத்தால் கைது செய்யப்பட்டார்.

நூதனமான கடத்தல் முறையின் படங்கள் சமூக ஊடகங்களில் கேலிகளை உருவாக்கியது.

Advertisement

பிபிசியின் கூற்றுப்படி, உகாண்டாவிற்கும் கடத்தப்படும் பெரும்பாலான அழகுசாதனப் பொருட்கள் தோலின் கருமையை குறைக்கும் பொருட்கள் இருக்கின்றன. அவை 2016ஆம் ஆண்டில் நாட்டால் தடை செய்யப்பட்டன. ஏனெனில் அவை பாதரசம் மற்றும் ஹைட்ரோகுவினோன் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

Advertisement