சவூதியில் இருந்து தனது மகளை பத்திரமாக மீட்டுத் தருமாறு தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.
Coimbatore: சவூதி அரேபியாவில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏஜெண்டுகள் தனது மகளை ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ளார் தாயார் ஒருவர், மகளை பத்திரமாக மீட்டுத் தருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ராஜா மணியிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது-
எனது 26 மகளை 3 மாதத்திற்கு முன்பாக தஞ்சாவூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஒருவர் ஆகிய 2 ஏஜெண்டுகள் சேர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத்திற்கு வேலைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டிலேய குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலை என்றும் அதற்கு மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் தருவார்கள் என்றும் கூறினார்கள்.
எனத மகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 24 மணி நேரமும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. ஓய்வெடுக்க நேரம் இல்லை. இதனால் எனது மகளின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர்த்து ஏஜெண்டுகள் எனத மகளை அனுப்பி வைத்த செலவுக்காக ரூ. 2 லட்சம் வரையில் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். எனது மகளை ரியாத்திலிருந்து பத்திரமாக மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.