This Article is From May 15, 2019

துப்பாக்கி சூட்டுக்கு முன் 'கர்ப்பமாக இருக்கிறேன்' என்று அலறிய பெண் : 5 முறை சுட்ட காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரிகளுக்கு போதிய விடுமுறை கொடுக்காததால் மன அழுத்தம் காரணமாக இந்த மாதிரி துப்பாகி சூடுகள் நடைபெறுகின்றன என்றும் கூறுகின்றனர்

துப்பாக்கி சூட்டுக்கு முன் 'கர்ப்பமாக இருக்கிறேன்' என்று அலறிய பெண் : 5 முறை சுட்ட காவல்துறை அதிகாரி

துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை

அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் பேடவுன் நகரில் 44 வயது பெண்மணியை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். 

இரவு 10.40 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து வந்துள்ளார் பமீலா ஷாண்டி டர்னர். அப்போது இரவு பாதுகாப்புக்கு வந்த காவல்துறை அதிகாரி, அவரிடம் கேள்விகளை கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் ‘நீங்கள் என்னை கேலி செய்கிறீர்கள்' என்று பேசியுள்ளார். இருவருக்கும் கருத்து மோதல் அடைந்த நிலையில் அந்தப் பெண்ணை கைது செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் கைது செய்யவிடாத நிலையில் அந்த பெண்ணை 5 முறை துப்பாக்கியினால் சுட்டுள்ளார். முதல் முறை சுட்டதும் அந்தபெண் ‘ஏன்…?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். பின் அந்தப் பெண் ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன்' என்றும் கூறியுள்ளார். அதற்குள் 4 குண்டுகள் அவர் உடலை துளைத்து விடுகிறது. 

குற்றத்தை நேரில் பார்த்த நபர் எடுத்த வீடியோவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது. 

இந்த கண்ட பலரும் வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அந்தபெண்ணை கொல்வதுதான் நோக்கமென்றால் ஒரு முறை சுடுவதே போதுமானது. ஆனால், காவல்துறை அதிகாரி  5 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

காவல்துறை அதிகாரிகளுக்கு போதிய விடுமுறை கொடுக்காததால் மன அழுத்தம் காரணமாக இந்த மாதிரி துப்பாகி சூடுகள் நடைபெறுகின்றன என்றும் கூறுகின்றனர். 

துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.

.