இதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர்.
ஒரு தரமான செல்ஃபி எடுக்க நீங்கள் எவ்வளவு மெனக்கெடுவீர்கள். நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், வேற லெவலுக்குச் சென்று செல்ஃபிகளை க்ளிக்கியுள்ளார். ஜெசிக்கா ஜார்ஜ் என்னும் அந்த பெண்மணி, நியூயார்க்கின் ரயிலில் பயணம் செய்துள்ளார். திடீரென்று எழுந்த அவர், ‘செல்ஃப் டைமர்' வைத்து செல்ஃபி எடுக்க ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணியான பென் யார், ஜெசிக்காவை படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் ஜெசிக்காவின் செல்ஃபி போஸ்களின் போது வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார். இதுவரை அந்த வீடியோவை 87 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலரும் ஜெசிக்காவின் தன்னம்பிக்கையை வியந்து பாராட்டியுள்ளனர்.
ஓடும் ரயிலில், ஹீல்ஸ் ஷூ-வுடன் ஜெசிக்கா செலஃபி போஸ் கொடுப்பதை பென், 57 நோடி வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்:
ஜெசிக்கா எடுத்த செல்ஃபிகள் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க விரும்புகிறீர்களா. இதோ அந்த படங்கள்.
பலரும் ஜெசிக்காவுக்குப் புகழாரம் சூட்டி வருகிறார்கள்.
ஜெசிக்காவும் இது குறித்து ட்விட்டரில், “நீங்கள் என் மீது காட்டியுள்ள அன்புக்கு மிக்க நன்றி. இந்த நேர்மறை எண்ணத்தை பரப்புவோம். ஒருவருக்கொருவர் துணை நிற்போம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Click for more
trending news