Read in English
This Article is From Oct 23, 2019

லைசென்ஸ் எடுக்க ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

ஷார்ட்ஸ், லுங்கி, அல்லது பெர்முடாக்களில் வரும் ஆண்கள் கண்ணியமான உடையில் வருமாறு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பெண்களுக்கும் இது பொருந்தும்

Advertisement
Chennai Written by

திரி ஃபோர்த் ஜூன்ஸ் பேண்ட்டினை அணிந்து ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்துள்ளார்.(Representational)

Chennai:

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணொருவர், கேகேநகர் ஆர்.டிஓ அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமம் எடுக்க வந்துள்ளார். 

திரி ஃபோர்த் ஜூன்ஸ் பேண்ட்டினை அணிந்து ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வந்துள்ளார். இந்த உடையுடன் ஓட்டுநர் உரிம சோதனையில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஆர்டிஓ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு பெண் கேப்ரி பேண்ட் அணிந்து வந்ததால் கண்ணியமான உடையில் வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஆர்.டி.ஓ அதிகாரி தெரிவித்தார்.

இது போன்ற சம்பவங்கள் ஆர்டிஓக்களில் புதிதல்ல 2018ல் இதேபோல் புகார் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆர்டிஓ அலுவலகங்களில் டிரஸ் கோட் இல்லையென்றாலும் சரியான உடையில் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement

ஷார்ட்ஸ், லுங்கி, அல்லது பெர்முடாக்களில் வரும் ஆண்கள் கண்ணியமான உடையில் வருமாறு திருப்பி அனுப்பப்படுகிறார்கள். பெண்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு ஓட்டுநர் அதிகாரி கூறுகையில், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அலுவலகம் ஒரு அரசாங்க அலுவலகம், இங்கு வரும் மக்களை தங்கள் சொந்த அலுவலகத்திற்குச் செல்லும்போது எவ்வாறு உடை அணிவார்களோ அவ்வாறு ஒழுங்காக உடையணிந்து வர வேண்டுமென்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.

Advertisement

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான மக்கள் போக்குவரத்து அலுவலகங்களில் கூடுகிறார்கள், இதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement