This Article is From Sep 30, 2018

நீதிமன்றம் அனுமதி அளித்தும் சபரிமலைக்கு செல்ல மறுக்கும் பெண்கள்

பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பெண்கள் தாங்கள் சபரிமலைக்கு செல்லப் போவதில்லை என்றும், 50 வயதை கடந்த பின்னர் செல்லப்போவதாக கூறியுள்ளனர்.

நீதிமன்றம் அனுமதி அளித்தும் சபரிமலைக்கு செல்ல மறுக்கும் பெண்கள்

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Chennai:

சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிலான பெண்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. மாதவிடாயை காரணம் காட்டி, பெண்களுக்கு மட்டும் இந்த பாகுபாடு காட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெள்ளிக்கிழமை ஓர் அதிரடித் தீர்ப்பை நீதிபதிகள் அறிவித்தனர்.

வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் 4 பேர் சபரி மலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பு பல்வேறு சர்ச்சைகளையும் விவாரங்களையும் பரப்பி வருகிறது. இந்த நிலையில் தீர்ப்பை ஏற்காமல் தாங்கள் 50 வயதுக்கு பின்னர் அல்லது மாதவிடாய் நின்ற பின்னர் சபரி மலைக்கு செல்லப் போவதாக பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ எங்களைப் பொருத்தவரையில் பாரம்பரியத்தை கடைபிடிப்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதனை நீதிமன்றம் ஏற்றாலும் இல்லாவிட்டாலும் பாரம்பரியம்தான் எங்களுக்கு முக்கியம் என்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.