This Article is From Dec 24, 2018

சபரிமலைக்கு செல்லும் பெண்கள் குழு: மனிதி வெளியே வா

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது

சபரிமலைக்கு செல்லும் பெண்கள் குழு: மனிதி வெளியே வா

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குள் நுழையலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின் பெண் பத்திரிக்கையாளர், பெண்ணியவாதி மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர் ஒருவர் என்று தனித்தனியாக கோயிலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால், இந்து அமைப்பு மற்றும் வலதுசாரி அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக எவரொருவராலும் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

இந்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண் பக்தர்களை ஒருங்கிணைத்து ‘மனிதி' என்ற பெண்ணிய அமைப்பு சபரிமலை கோயிலுக்கு அழைத்துச் செல்ல முன்வந்துள்ளது. சென்னையிலிருந்து - 10 முதல் 15 பெண்களும் கர்நாடகா, ஒடிஸா, மத்திய பிரதேசத்திலிருந்து -3 முதல் 5 பெண்களும் மேற்கு வங்கத்திலிருந்து -2 பேரும் சத்தீஸ்கரிலிருந்து -ஒருவரும் கலந்து கொள்ளவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெண் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்குள் சென்று தரிசிக்க விரும்பும் நிலையில் கேரள அரசிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். அதற்கு முறையாக கேரளா காவல்துறை பதிலளித்துள்ளது. இன்று மாலை புறப்பட்டு நாளை காலை கோட்டயம் சென்றடைந்து பின் அங்கிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். கோட்டயம் போய் இறங்கியது முதல் கேரள காவல்துறை பாதுகாப்பு அளிக்கத் தொடங்கிவிடும் எனத் தெரிவித்தார் மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி

93doc7ng

மேலும் குறித்து ‘மனிதி' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான செல்வியிடம் விரிவாக பேசியபோது,

பெண் பக்தர்கள் செல்வது வெகுஜன மக்களின் நம்பிக்கையை பாதிக்காதா என்று கேட்டதற்கு “ஒரு கட்டத்திற்கு பின் வெகுஜன மக்களுக்கு இதை புரிய வைக்கத்தான் வேண்டும். எதிர்ப்பு இருக்கிறது என்பதற்காக நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது. ” என்றார். “தோல் சீலை போராட்டத்தின் போது கூட பிற்போக்குவாதிகள் பெண்களை ஒருங்கிணைத்து போராடிய பெண்களின் சட்டைகளை கிழிக்க வைத்தார்கள். அதே நிகழ்வு இன்றும் திரும்புகிறது.”

இந்து மத நம்பிக்கை உடையவர்களை எதிர்க்க மட்டுமே இதைத் செய்கிறீர்களா என்றதற்கு “இந்தியா பல மத நம்பிக்கைகொண்டவர்கள் இருக்கிறார்கள் ஆனால் இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே அதிகமாக இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் அரசே மதம் சார்ந்த அரசாக செயல்படும்போது அரசு மதத்தை காரணமாக கொண்டு ஒடுக்கும்போது அதற்கு எதிராகத்தான் போராட முடியும். இந்து மதம் ஒடுக்குமுறை ஏவுகிறது என்றால் அதற்கு எதிராகத்தான் போராடுவோம் மேலும் இந்து கோயில் மட்டுமல்ல, முஸ்லிம் தர்காவில் பெண்களை அனுமதிக்கவில்லை என்றாலும் போராடுவோம்” என்றார்.

மதமே பெண்களுக்கு எதிரானது என்று சொல்லும் பெண்ணியவாதிகள் ஏன் பெண்கள் கோயிலுக்குள் செல்வதை ஆதரித்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியபோது, “தலீத் கோயில் நுழைவிற்கு பல இடதுசாரி அமைப்புகள் போராடியுள்ளனர். பெரியார் வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார். தாலி தேவையில்லை என்று சொல்பவர்கள் கூட தாலி கட்டி அறுப்பது ஏன்…? அது ஒரு போராட்ட வடிவம் அல்லவா. அதுபோல் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும்போது அதை மீண்டெடுப்பதற்கான போராட்டம் இது. மனிதி அமைப்பின் முக்கிய பணி என்பது ஒருபோதும் இதில்லை. பெண்கள் கோயிலுக்கு செல்லலாம், உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில் வைத்தாவது பெண்களை கோயிலுக்குள் அனுமதித்து விட்டால் நாங்கள் இதை எடுத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு இடத்தில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படும்போது அந்த உரிமையை பெறுவதற்காகவே பெண்ணியவாதிகள் அங்கு சென்று அதற்காக போராடுவதுதான் சரியானது.” என்றார்

பெண்ணியம் பேசுகிறவர்களும் செல்லும்போது என்ற ‘நம்பிக்கை மிக்க கோயில்' என்ற இடம் சுற்றுலாத்தளமாகி விடாது என்று கேட்டதும், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது அனைத்து வயது பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்பதே தவிர பெண் பக்தர்கள் மட்டும் போகலாம் பிற பெண்கள் போகக் கூடாது என்று சொல்ல முடியாது என்று அறிவிக்கவில்லை” என்றார்.

lok4f5no

உங்கள் அமைப்பு பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும் பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதற்காக செல்கிறீர்களா என்றதற்கு, “ நாங்கள் செல்வது என்பது ஒருபோதும் ஊடகங்களில் கிடைக்கும் பிரபலத்திற்காக அல்ல பெண்களின் உரிமை மறுக்கப்படும்போது அதற்கான போராட்டத்தில் இருக்கும் அபாயங்கள் எப்படி பிரபலத்தன்மையாகும் என்று கேள்வி எழுப்பினார். அங்கு செல்வதில் இருக்கும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவே கேரள அரசுக்கு முறையாக தெரிவித்து ஊடகத்திற்கும் அறிவித்து செல்கிறோம். சட்ட ரீதியான நியாங்களோ, கருத்தியல் நியாயங்களோ, சமூக அற நியாயங்களோ இல்லாத அமைப்பினர், அனைத்து நியாயங்களும் கொண்ட அமைப்பை எதிர்க்க காரணமின்றி மோசமான வார்த்தைகளை பேசியும் இது போன்ற காரணங்களை மக்களிடம் பரப்பியும் வருகிறார்கள்.” என்றார் காட்டமாக “எந்தவொரு தடை வந்தாலும் அரசின் துணை கொண்டு அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்று தெளிவாக கூறினார் செல்வி.


 

.