This Article is From Nov 30, 2018

போரில் ஈடுபடுவதற்கு வீராங்கனைகள் இன்னும் தயாராகவில்லை - ராணுவ தளபதி

போரில் வீராங்கனைகளை ஈடுபடுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயம் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்

போரில் ஈடுபடுவதற்கு வீராங்கனைகள் இன்னும் தயாராகவில்லை - ராணுவ தளபதி

புனேவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்புக்கு பின்னர் பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார்.

Pune:

போரில் வீராங்கனைகளை ஈடுபடுத்தும் அளவிற்கு இந்திய ராணுவம் இன்னும் தயாராகவில்லை என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புனேவில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது-

வீராங்கனைகளை போரில் ஈடுபடுத்தாமல் ராணுவத்தின் மற்ற பிரிவுகளில் ஈடுபடுத்தி வருகிறோம். போரில் வீராங்கனைகளை ஈடுபடுத்தும் அளவுக்கு இன்னும் தயாராகவில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நம்முடைய ராணுவ பலத்தை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது.

நமது ராணுவத்தினர் கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ளனர். முப்படைகளிலும் பெண்களுக்கு இடம் அளிக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளில் மொழி புரிதல் சிக்கல்கள் இருக்கின்றன.

மற்ற நாடுகளின் ராணுவத்துடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அப்போது மொழி அறிவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

.