This Article is From Aug 04, 2018

கோவையில் பெண்களை பாலியல் உறவுக்குத் தூண்டிய விடுதி வார்டன்… நீதிமன்றம் கறார்!

இந்த வழக்கில் அந்தப் பெண் விடுதி வார்டனை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Advertisement
தெற்கு Posted by

கோயம்புத்தூரில், விடுதி வார்டனாக இருந்த பெண், விடுதியில் தங்கியிருந்த பெண்களை பாலியல் உறவுக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்தப் பெண் விடுதி வார்டனை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் விடுதியின் வார்டன் புனிதா, விடுதியில் தங்கியிருந்த 5 பெண்களை, அதன் உரிமையாளர் ஜகன்நாதனின் பிறந்த நாள் விழாவுக்கு கடந்த 22 ஆம் தேதி அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது புனிதா, பெண்களிடம் விடுதி உரிமையாளரிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அப்படிச் செய்தால் விடுதி கட்டணம் குறைக்கப்படும் என்றும் புனிதா கூறியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள், போலீஸில் ஜூலை 24 ஆம் தேதி புகார் அளித்தனர். 

Advertisement

இது குறித்தி வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜகன்நாதன் மற்றும் புனிதா ஆகிய இருவரையும் விசாரிக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்கள் தலைமறைவாகினர். தொடர்ந்து தலைமறைவாகவே இருவரும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், அலங்குளம் என்ற இடத்தில் இருக்கும் குளத்தில் ஜகன்நாதன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படார். 

Advertisement

இது குறித்து போலீஸ், ‘இந்த மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்’ என்று தகவல் தெரிவித்தனர். 

மேலும் புனிதா கடந்த 1 ஆம் தேதி, 6வது மாஜிஸ்ட்ரேட் ஆர்.கண்ணன் முன்னிலையில் சரணடைந்தார். இதையடுத்து, அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement