This Article is From Nov 19, 2018

மகளிர் டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

க்ரூப் ஏ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளும், க்ரூப் பி பிரிவில் இந்திய, ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன

Advertisement
Sports Posted by

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி போட்டிகளை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்தது. ஷெருப்ஷோல் மற்றும் ட்ரன்க்ளே தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் ஒரு தோல்வியும் சந்திக்காத அணிகள் வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியும், இந்திய அணியும் மட்டுமே இடம் பிடித்துள்ளன.

Advertisement

க்ரூப் ஏ பிரிவில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளும், க்ரூப் பி பிரிவில் இந்திய, ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா இங்கிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணியையும் எதிர்கொள்கின்றன. அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள ஒரே ஆசிய அணி இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement