This Article is From Nov 23, 2018

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா இரண்டாவது அரையிறுதி போட்டியில் வென்ற இங்கிலாந்து அணியை ஞாயிறன்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்தத் தொடரில் ஒரு போட்டியையும் தோற்காத அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி சேஸிங்கை தேர்வு செய்து ஆட்டத்தை துவங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஹீலி மற்றும் கேப்டன் லானிங்கிந் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்தது.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் பெர்ரி 2 ஓவர்கள் வீசி 2 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத மேற்கிந்திய தீவுகள் அணி முதல் தோல்வியை அரையிறுதி போட்டியில் சந்தித்து வெளியேறியது.

மேலும், ஆஸ்திரேலியா இரண்டாவது அரையிறுதி போட்டியில் வென்ற இங்கிலாந்து அணியை ஞாயிறன்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது.

.