This Article is From Nov 19, 2018

அனைத்து போட்டிகளிலும் தோற்று வெளியேறியது பங்களாதேஷ்!

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் குவித்தது

அனைத்து போட்டிகளிலும் தோற்று வெளியேறியது பங்களாதேஷ்!

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இரு பிரிவுகளிலும் அரையிறுதிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் சம்ப்ரதாய போட்டியில் மோதின. இந்த ஆட்டம் அட்டவணையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் இந்தப் போட்டி துவங்கியது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் குவித்தது. அந்த அணியின் காப் 19 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார்.பங்களாதேஷ் கேப்டன் ஹாட்டன் 4 ஓவரில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய பங்களாதேஷ் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முழுமையாக ஆடி 5 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே குவித்தது. பங்களாதேஷ் வீராங்கனைகள் மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதனால் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முடிவுகள் எந்த ஆட்டத்தையும் பாதிக்காது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

.