This Article is From Dec 15, 2018

''எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம்'' - ஜெயக்குமார் அறிவிப்பு

எந்த நிலையிலும் ஸ்டர்லைட் ஆலையை திறப்பதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

Advertisement
தெற்கு Posted by

ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரங்களுக்குள் திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான். அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. எனவே, அந்த நிலைப்பாட்டை அனைத்து நிலையிலும் வலியுறுத்துவோம்.

நீதிமன்றத்தை விமர்சிக்க கூடாது. தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது பொதுவாக அவர்கள்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில், சமூக உணர்வுடன் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அளித்திருக்கும் உத்தரவு, அவர்களது கொள்கைக்கு அடிப்படையிலேயே முரணாக இருக்கிறது.

தமிழக அரசை பொறுத்தவரையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். எந்த நிலையிலும் ஸ்டர்லைட் ஆலையை திறப்பதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement