Read in English বাংলায় পড়ুন
This Article is From Dec 18, 2018

''பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம்'' - ராகுல் காந்தி சபதம்

விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விடாப்பிடியாக உள்ளார்.

Advertisement
இந்தியா
New Delhi:

விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதவரை பிரதமர் நரேந்திர மோடியை தூங்க விட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. இந்த மூன்று மாநிலங்களும் பாஜகவின் கோட்டையாக இருந்தன.

3 மாநிலங்களில் ஆட்சியை அமைத்திருப்பது காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த அதிரடியாக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாய கடன்களை காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்திருக்கிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ''ஆட்சிக்கு வந்த 6 மணி நேரத்தில் 2 மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுத்தோம். விரைவில் 3-வது மாநிலத்திலும் இந்த அறிவிப்பு வரும்.

Advertisement

நாங்கள் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம். மத்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாதவரை மோடியை தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விட மாட்டோம்'' என்று கூறினார்.

Advertisement