This Article is From Dec 20, 2019

'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைக்கு வராது' : வேணுகோபால்

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைக்கு வராது' : வேணுகோபால்

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்த முடியாது என்று கூறுகிறார் வேணுகோபால்.

Kochi:

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தம் நடைமுறைக்கு வராது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்த முடியாது என்று கூறுகிறார் வேணுகோபால்.

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,'காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டதிருத்தத்தை நிறைவேற்றப்படுமா என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று தெரிவித்துள்ளர். 

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள வேணுகோபால், அதனை நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்த முடியாது என்று கூறியுள்ளார். 

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தார். 

நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

.