4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Jabalpur, Madhya Pradesh: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் அந்நாட்டின் சிறுபான்மை அதிகளுக்கு, இந்திய குடியுரிமை கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது-
காங்கிரஸ்காரர்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். உங்களால் எந்த அளவுக்கு குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க முடியுமோ அந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால், பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மை அகதிகள் இந்திய குடியுரிமையை பெறும் வரையில் நாங்கள் ஓய மாட்டோம்.
அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை கிடைத்த பின்னர்தான் நாங்கள் ஓய்வெடுப்போம். இதை செய்வதிலிருந்து எங்களை யாரும் தடுக்க முடியாது.
பாகிஸ்தானிலிருந்து வரும் இந்து, சீக்கியர், புத்தர்கள், கிறிஸ்தவ அகதிகளுக்கு இந்தியாவில் அனைத்து விதமான உரிமைகளும் கிடைக்கும்.
இன்னும் 4 மாதங்களுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.