This Article is From Nov 02, 2018

"பணியிட பாதுகாப்பைவிட பெண்கள் பாதுகாப்பு முக்கியம்" போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள்!

கூகுள் பணியாளர்கள், பெண்கள் பாதுகாப்புகாக காலிஃபோர்னியாவில் போராட்டம் நடத்தினார்கள்

கூகுள் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த தேவையானவற்றைச் செய்து வருவதாக சுந்தர் பிச்சைத் தெரித்தார்

MOUNTAIN VIEW, California:

கடந்த வியாழனன்று ஆயிரக்கணக்கான கூகுள் பணியாளர்கள் பாலியல் புகாரினால், நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகின் பெரிய தேடுதல் தளம் பணியிட சமநிலையற்ற சூழலை எதிர்கொண்டுள்ளது.

ஆசியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் துவங்கப்பட்ட இந்தப் போராட்ட அலை தற்போது சிலிக்கான் வேலி வரை பரவியுள்ளது. பாலியல் புகாரளிக்கப்பட்ட ஆன்டி ரூபினுக்கு 90 மில்லியன் டாலர் பணப்பயன்களை வழங்கியது சர்ச்சையாகியுள்ளது.

போராட்டத்தில் கூகுளின் 60 % அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அமெரிக்காவை தாண்டிய மிகப்பெரிய அலுவலகமான டப்ளின், லண்டன், பெர்லின் மற்ரும் சிங்கப்பூரிலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

ரூபின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது மட்டுமல்லாமல், அவரது பணப்பயன் குறித்த விமர்சனங்களையும் மறுத்துள்ளார். நியூயார்க் டைம்ஸின் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார்.

கலிஃபோர்னியா அலுவலகத்தில் உள்ள பலர் அங்கு போராட்டத்தில் ''பணியாளர் பாதுகாப்பை விட பெண்கள் பாதுகாப்பு முக்கியம்'' என்று கோஷமிட்டுள்ளனர். நீல நிற ரிப்பன் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆல்ஃபபெட்டின் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு நிகழ்ந்தால், அதில் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் ''பணியாளர்கள் பணியிடத்தில் மோசமாக நடந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளன. இதற்காக முதலில் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சிஇஓவாக இந்த புகார்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மீ டூ போராட்டம் வலுத்து வரும் நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி ஆண் பணியாளர்கள் எச்சரிப்பது போன்ற செயல்கள் மீது கூகுள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுளின் மூத்த அதிகாரிகளும் பணியிட பாதுகாப்பு கூகுளில் உறுதி செய்யப்படும் என்று கூறி வருகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.