This Article is From Apr 23, 2019

உலக புத்தக தினத்தை கொண்டாடிடுங்கள்!!

World Book Day Quotes: புத்தகத்தின்மூலம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சிந்தனை விரிவடையும்.  புத்தக வாசிப்பை அதிகரித்து சிந்தனையும் செயலையும் சிறப்பாக்கிடுங்கள். 

உலக புத்தக தினத்தை கொண்டாடிடுங்கள்!!

2019 World Book Day: உலக புத்தக தினம் 1995 ஆம் ஆண்டுதான் முதல்முறையாக கடைபிடிக்கப்பட்டது.

New Delhi:

ஒவ்வொரு வருடம் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக UNESCO மற்றும் சர்வதேச அமைப்புகள் கொண்டாடி வருகின்றன.  உலக புத்தக தினத்தை காப்புரிமை தினம் என்றும் அழைக்கப்படுகிறது.  உலக மக்கள் அனைவருக்கும் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், வாசிப்பின் ஆனந்தத்தை கொண்டாடும் விதமாகவே புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.  வில்லியம் ஷேக்ஸ்பியர், மைகெல் செர்வண்ட்ஸ், இன்கா கார்சிலோசா டீ லா வீகா ஆகியோர் இதே நாளில் தான் இயற்கை எய்தினார்கள்.  அவர்களை நினைவுகூரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே UNESCO ஏப்ரல் 23ஆம் தேதியை புத்தக தினமாக அறிவித்தது.  1995 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த UNESCO மாநாட்டில் உலகளாவிய எழுத்தாளர்கள் மற்றும் சிறந்த புத்தகங்களை கௌரவிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 23ஆம் தேதியை புத்தக தினமாக கொண்டாடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

f43pgvq

நோக்கம்:

உலக புத்தக தினம் புதிய மற்றும் பழைய புத்தகம் மற்றும் அதன் பாரம்பரியத்தை மறவாமல் இருக்கவே உருவாக்கப்பட்டது.  இந்த நாளில் UNESCO எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் நூலகங்களின் பெருமை குறித்து அறிமுகப்படுத்துகிறது.  அந்த வகையில், UNESCO புத்தக தலைநகரமாக “ஷார்ஜா”வை அறிவித்துள்ளது.  இதனை தொடர்ந்து 2020ல் கோலா லம்பூர் அறிவிக்கப்படவுள்ளது. 

t618qujk

இந்த நாள் முழுவதும், UNESCO சிறந்த புத்தகம், சிறந்த ஆக்கம், சமத்துவம் பேசும் புத்தகம் மற்றும் அறிவை தூண்டக்கூடிய புத்தகங்களை பெருமைப்படுத்துகிறது. எழுத்தாளர்கள், வெளியிடுபவர்கள், ஆசிரியர்கள், நூலக காப்பாளர், தனியார் நிறுவனங்கள், பொதுத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என எல்லோரும் சேர்த்தே இந்த புத்தக தினத்தை கொண்டாட வேண்டும் என்றும், இதன் மூலம் வாசிப்பு ஆர்வம் அனைவருக்கும் அதிகரிக்கும் என்றும் கருத்து தெரிவிக்கிறது UNESCO.

நோக்கம்:

UNESCO- ன் நிர்வாக இயக்குநரான ஆட்ரே அசௌலே உலக புத்தக தினத்தை முன்னிட்டு பேசியதாவது,  புத்தகங்கள் என்பது பாரம்பரியத்தை உலகளாவில் பரப்பக்கூடியது. ஒவ்வொரு புத்தகமும் வெவ்வேறு மொழிகளில் பிரதியாகி விற்பனைக்கு வருகிறது.  அப்படி எந்த புத்தகம் சிறந்த புத்தகமோ அதன் கருத்து மற்றும் சிறப்பு எல்லோருக்கும் சென்றடையவே அனைத்து  மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு வருகிறது.  நல்ல புத்தகங்கள் பழமையான மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே இந்நாளின் தீர்மானம்.  இந்த வருடத்தை “International Year of Indigenous language” என்று UNESCO அறிவித்துள்ளது.  புத்தகத்தின்மூலம் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சிந்தனை விரிவடையும்.  புத்தக வாசிப்பை அதிகரித்து சிந்தனையும் செயலையும் சிறப்பாக்கிடுங்கள். 

.