This Article is From Jun 13, 2019

''உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் விளையாடும்'': சுந்தர் பிச்சை!!

வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

''உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் விளையாடும்'': சுந்தர் பிச்சை!!

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும் என்கிறார் சுந்தர்.

Washington:

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் - இங்கிலாந்தும் விளையாடும் என்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கணித்துள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இந்த நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில்-

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதும். ஆனால் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருகின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியா நன்றாக விளையாடினாலும், அதற்கான சவால்களும் குறைவில்லாமல் உள்ளன.

இவ்வாறு சுந்தர் பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பார்வையாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.