This Article is From Jun 05, 2018

ப்ளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு மொபைல் ஆப் - 'ஸ்மார்ட் ட்ராஷ் கேன்ஸ்' திட்டம்

2020 ஆண்டில்,சென்னையில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும், ப்ளாஸ்டிக் மறு சுழற்சி எளிதாக நடைப்பெற வேண்டிய நிலைக்கு உழைக்க வேண்டும்

Smart trash cans' aim is to ensure that no plastic ends up in oceans.

ஹைலைட்ஸ்

  • சுற்றுச்சூழல் தினத்திற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
  • கழிவு மேலாண்மை நிறுவனம் ப்ளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஆப்
  • ஜூன் 23 முதல் மைலாப்பூர் பகுதிகளில் செயலாற்ற உள்ளன
Chennai:

சென்னை : உலக சுற்றுச்சூழல் தினம் காரணமாக, சென்னையில் உள்ள பல்வேறு அமைப்புகள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த கழிவு மேலாண்மை நிறுவனம், ப்ளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் ட்ராஷ் கேன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், ஜூன் 23 ஆம் தேதி முதல் மைலாப்பூர் பகுதிகளில் செயலாற்ற உள்ளன. இதன் மூலம், வீட்டில் உபயோகிக்கப்படும் ப்ளாஸ்டிக் பொருட்களை அந்தப் பகுதிகளில் வைக்கப்படும் ‘ஸ்மார்ட் ட்ராஷ் கேன்களில்’ கொட்ட வேண்டும். தொட்டியில் இருக்கும் ஸ்கேனர் ப்ளாஸ்டிக் வகையினைக் கண்டறிந்து, செயல்படும். ஒவ்வொரு முறை ப்ளாஸ்டிக் பொருட்களை கொட்ட கேன்களைப் பயன்படுத்தும் போதும், அந்த நபருக்குப் புள்ளிகள் கொடுக்கப்படும், பரிசுகளும் உண்டு.

ஆப் மூலம் செயல்படும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினால், கந்தல் துணி எடுப்பவர்க்கும், பழைய சாமன் வியாபாரிகளுக்கும் எளிமையாக அமையும். இதனால், சுற்றுப்புறச் சூழல் காப்பதற்கு பங்காற்றலாம். “கடல் மற்றும் நிலங்களில் ப்ளாஸ்டிக் கலக்காமல் இருக்கவும், அதனை சரியான மறுசுழற்சிக்கு அனுப்பவும், சூழலை காக்க மக்கள் எளிதில் பங்கேற்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று இந்த திட்டத்தின் நிறுவனர், திரு.சித்தார்த் ஹாண்டே தெரிவித்தார்.

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் ப்ளாஸ்டிக் மறு சுழற்சி முறை சிறப்பாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக ஆராய்ச்சிகளில், ஒவ்வொரு வருடமும்,  8.3 பில்லியன் டன் ப்ளாஸ்டிக் பொருட்கள் வெளியாகிறன. அதில் 8 சதவித கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. சென்னையில், மூன்றில் ஒரு பங்கு ப்ளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலன, பெட் பாட்டில்கள் கிடைக்கின்றன. 

புதிய திட்டத்தை உருவாக்கிய குழு, ப்ளாஸ்டிக் பொருட்கள் அகற்ற பயன்படும் இந்த முறையை பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்து கொண்டால், குறைந்த செலவில், திறம்பட ப்ளாஸ்டிக் கழிவுகளை அகற்றி மறு சுழற்சிக்கு அனுப்பலாம் என்று நம்புகின்றனர். 2020 ஆண்டில்,சென்னையில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும், ப்ளாஸ்டிக் மறு சுழற்சி எளிதாக நடைப்பெற வேண்டிய நிலைக்கு உழைக்க வேண்டும் என்று கூறினர். 

.