Read in English
This Article is From Jan 31, 2020

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: சர்வதேச அவசரநிலை பிரகடனம் பிறப்பிப்பு!

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூபே மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் உண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தேசிய அளவில் 9,692 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

18 நாடுளில் 100 பேர் வரை இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீனவை தவிர்த்து உயிரிழப்புகள் எங்கும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Highlights

  • WHO said coronavirus cases had spread to 18 countries
  • Italy announced its first confirmed cases, in two Chinese tourists
  • Some 60 million in Hubei province are living under virtual lockdown
Shanghai:

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உலக அளவிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹூபே மாகாணத்தில் உயிரிழந்தவர்களின் உண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தேசிய அளவில் 9,692 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 18 நாடுளில் 100 பேர் வரையில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சீனவை தவிர்த்து உயிரிழப்புகள் எங்கும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், 18 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளதை உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாலியிலும் இரண்டு சீன சுற்றுலா பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளளது. 

Advertisement

இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே கூறும்போது, இத்தாலி மற்றும் சீனா இடையேயான அனைத்து விமான போக்குவரத்து சேவைகளையும் முடக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிக கடுமையான நடவடிக்கையாகும். 

எனினும், பெரும்பாலான வெளிநாட்டு அரசுகள் ஹூபேயில் உள்ள தங்கள் குடிமக்களை பத்திரமாக மீட்டு தங்கள் நாட்டிற்கு அழைத்துச்சென்று தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. அதேநேரத்தில் ஏர் பிரான்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சீனாவின் பிரதான பகுதிகளுக்கான விமான சேவையை நிறுத்திவிட்டன. 

வைரஸ் பாதிப்பு குறித்த அழுத்தம் காரணமாக அனைத்து விமானங்களையும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாட்டில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தில் உலகெங்கிலும் உள்ள பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement