This Article is From Jul 26, 2019

கல்லீரலை பாதிக்கக்கூடிய 5 உணவுகள் என்னென்ன!!

மது அருந்துவதால் கல்லீரல் நோய், மனநோய் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்படும்.

கல்லீரலை பாதிக்கக்கூடிய 5 உணவுகள் என்னென்ன!!

ஹைலைட்ஸ்

  • கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை குறைப்பது நல்லது.
  • சோடா மற்றும் குளிர்பானம் குடிப்பதால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
  • மது அருந்துவதால் ஃபேட்டி லிவர் நோய் ஏற்படும்.

வருடாவருடம் ஜூலை 28 ஆம் தேதி உலக கல்லீரல் அழற்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.  உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் விளைவாக வருடம் 1.4 மில்லியன் மக்கள் இறக்க நேர்கிறது.   மேலும் பத்தில் ஒன்பது பேர் ஹெச்ஐவி நோயை விட ஹெபடைடிஸ் நோயால்தான் பாதிப்படைகிறார்கள்.  இந்த கல்லீரல் அழற்சி நோயை  உண்டாக்கக்கூடிய சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.  அதேபோல கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் வைரஸ் காரணமாக வீக்கம் உண்டாகும்.  இந்த நோய் மது, நச்சுக்கள் மற்றும் மருந்துகளாலும் உண்டாகும்.  

சர்க்கரை: 
சர்க்கரையை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் பற்களுக்கு மட்டுமல்ல, கல்லீரலுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிடுவதால் ஃபேட்டி லிவர் நோய் உண்டாகும்.  சர்க்கரை பயன்பாட்டை குறைக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். 
 

4ppv25jg

 

ஹெர்பல் சப்ளிமெண்ட்ஸ்: 
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய நச்சுக்கள் எல்லாமே கல்லீரலில் தான் தேக்கமடையும்.  புதிதாக நீங்கள் மூலிகை மருந்துகளை சாப்பிட நினைத்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.  

குளிர்பானம்: 
நீங்கள் நினைத்து பார்ப்பதை தாண்டி கேடு விளைவிக்கக்கூடியது இந்த குளிர்பானங்கள்.  தொடர்ச்சியாக குளிர்பானங்களை குடித்து வந்தால் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.  இந்த பானங்களில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுகிறது.  இதன் காரணமாக உடல் பருமனாவதோடு கல்லீரல் ஆரோக்கியமும் கெட்டுவிடும். 
 

48d0q03

 

கொழுப்பு: 
துரித உணவுகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பு சத்துக்கள் இருக்கின்றன.  இந்த கொழுப்புகள் ஃபேட்டி லிவர் நோயை உண்டாக்கும் தன்மை கொண்டது.  மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யும். 

மதுபானம்: 
மதுபானம் அருந்துவதால் ஃபேட்டி லிவர் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.  மது அருந்துவதால் கல்லீரல் நோய், மனநோய் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்படும்.  மதுவை நிறுத்திவிட்டால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராகி கல்லீரலும் ஆரோக்கியமாக இருக்கும்.  

.