This Article is From Jul 13, 2019

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடனப் போட்டி, தற்போது சென்னையில்!

சென்னையில் ஆகஸ்ட் 2 அன்று இந்த போட்டியின் தகுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடனப் போட்டி, தற்போது சென்னையில்!

லட்சக்கணக்கான ரசிகர்களையும் ஆயிரக்கணக்கான கலைஞர்களை, ஒரு உலகளாவிய சமூகமாக மாற்றும் மேடைதான் இந்த 'வோர்ல்ட் ஆப் டேன்ஸ்' (World of Dance). 2008-ஆம் ஆண்டு ஒரு சிறிய நிகழ்ச்சியாக துவங்கப்பட்ட இந்த 'வோர்ல்ட் ஆப் டேன்ஸ்', தறபோது லட்சக்கணக்கான உலக ரசிகர்களை ஆட வைக்கும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி. யூடூப் நட்சத்திரங்கள், தொழில் பிரபலங்கள், அனைத்திற்கும் மேலாக 25 நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது இந்த நிகழ்ச்சி. ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez) தயாரிப்பில், 2017 ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி நடனப்போட்டியாக உருவெடுத்திருக்கிறது. 2020-ல் தனது நான்காவது சீசனில் அடியெடுத்து வைக்கவுள்ளது.

எத்த ஒரு பகைமையும் இல்லாமல், எந்த ஒரு மொழித் தடைகளும் இல்லாமல், மொத்தத்தில் எல்லைகள் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த போட்டி தற்போது இந்தியாவிற்கும் வந்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த நடனப் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடைபெறவுள்ளது. இந்த தகுதி சுற்றில் தேர்வாபவர்கள், என்.பி.சி (NBC) தொலைகாட்சியின் இந்த 'வோர்ல்ட் ஆப் டேன்ஸ்' ரியாலிட்டி நடனப்போட்டியில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு கிடக்கும். அதற்கும் மேலாக, இந்த போட்டியின் பரிசுத்தொகையான 1 மில்லியன் டாலர்களை பெருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். 

பகுதி வாரியாக நடைபெறும் இந்த போட்டியின் தகுதிச் சுற்று, இந்தியாவின் ஆறு பெரு நகரங்களில் நடைபெறவுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்த தகுதிச்சுற்று சென்னையில் ஆகஸ்ட் 2 அன்று நடைபெறவுள்ளது. முதலில் சென்னையில் நடைபெறவுள்ள இந்த போட்டி,அதை தொடர்ந்து மும்பை, பெங்களூரு, டெல்லி, கொச்சி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. சென்னையில் இந்த தகுதிச் சுற்றுப்போட்டி பீனிக்ஸ் மார்கெட் சிட்டி ( Phoenix Market City)-யில் ஆகஸ்ட் 2 அன்று நடைபெறவுள்ளது.

கவணிக்க வேண்டிய தகவல்கள், சென்னையில் இந்த போட்டி...

நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 2, 2019

நடைபெறும் இடம்: பீனிக்ஸ் மார்கெட் சிட்டி ( Phoenix Market City)

மெலும் தகவலுக்கு: Worldofdance.com

முன்பதிவிற்கு: 'வோர்ல்ட் ஆப் டேன்ஸ்' - சென்னை

.