உலக மக்கள் தொகை தினம் ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்டு வருடம் தோறும் ஜூலை 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெருகி வரும் உலக மக்கள் தொகை பற்றிய விழிப்புணர்வு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் 2018 ஆண்டிற்கான தீம் "குடும்ப கட்டுப்பாடு என்பது ஒரு மனித உரிமை". முதன் முறையாக 1989 ஆம் ஆண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆளும் குழு 1987 ஆம் ஆண்டு இருந்த மக்கள் தொகை எண்ணிக்கையின் காரணமாக இதை தொடங்கி வைத்தது. அப்போது மக்கள் தொகை ஏற்கனவே 5 பில்லியனைத் தாண்டிவிட்டது, பெருகி வரும் உலக மக்கள்தொகை உண்மையில் கவனத்தில் கொள்ள வேண்டிய காரணியாக இருந்தது. எனவே, இந்த நாள் பெருகிவரும் மக்கள் தொகை பிரச்சினையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பிக்கப்பட்டது.
உலக மக்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன?
உலக மக்கள்தொகை தினம், மிகப்பெரிய அளவில் பெருகிவரும் உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எனினும் 2018 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் குடும்ப கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துகிறது. முதல் முறையாக, "குடும்பக் கட்டுப்பாடு ஒரு மனித உரிமையாகும் என்கிற முழக்கம், பெண்கள் குறுகிய இடைவெளியில் கர்ப்பம் கொள்வதை மறுக்கும் உரிமை எனக்கூறுகிற 50 ஆண்டுகளான ஒரு சட்டத்திற்கு உயிர்ப்பளித்திருக்கிறது.
இந்த முன்னெடுப்பின் முதன்மையான நோக்கம் மக்களிடையே இனப்பெருக்க சுகாதார பிரச்சனைகளைப் பற்றி விழிப்புணர்வு அதிகரிப்பதே ஆகும். இது பெண்கள் மோசமான இனப்பெருக்க சுகாதாரத்திற்கு ஆளாவதால் தான் அதிகமாகிறது. ஒரு குழந்தையை பிரசவிக்கும் போது ஒவ்வொரு நாளும் 800 பெண்கள் இறக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, இந்த நாளின் முக்கிய நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் அவர்களது இனப்பெருக்க ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்க வேண்டும் என்பதையும் அதிக அளவிலான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ஆகும். உலக மக்கள் தொகை தினம் என்பது விழிப்புணர்வின் கொண்டாட்டம், மக்களை தொகை பிரச்னைகளைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள உதவும் நாள்.மக்கள் தொகை பிரச்சனைகள் என்பது குடும்பக் கட்டுப்பாடு, மனித உரிமைகள், சுகாதார உரிமை, குழந்தைகளின் உடல்நலம், பாலின சமத்துவம், குழந்தை திருமணம், கருத்தடை பயன்பாடு, பாலியல் கல்வி, பாலியல் நோயைப் பற்றிய அறிதல் ஆகியவைகளை உள்ளடக்கும்.
பாலுறவு தொடர்பான பிரச்சனைகள் 15 - 19 வயதில் கவனிக்கப்பட வேண்டம், ஏனென்றால் உலகில் 15 மில்லயன் பிரசவங்கள் இந்த வயதுள்ள பெண்களிடத்தில் தான் நடைபெறுகின்றன. இதில் 4 மில்லியன் பிரசவங்கள் கர்ப்ப சிக்கல் அல்லது மற்ற பிற இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றின் காரணமாக கருக்கலைப்பில் முடிகின்றன.
2018 உலக மக்கள் தொகை தினத்தின் பல முக்கிய அம்சங்கள்:
1. இந்த நாள் இளம் ஆண், பெண் இருவரையும் வலுப்படுத்தவே கொண்டாடப்படுகிறது.
2. இளம் வயதிலேயே அவர்களுக்கு தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கு சரியான வழிமுறைகளைப் பற்றி கற்பிக்க வேண்டும்.
3. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரம்ப கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
4. சமூகத்தில் இருக்கும் பாலின முரண்பாடுகளை அகற்ற மக்களுக்கு கற்றுக்கொடுத்தல்
5. பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் அவை எப்படித் தடுக்கப்படலாம் என்பதைப் பற்றி கற்பித்தல்.
6. ஒவ்வொரு ஜோடிகளுக்கும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.
7. ஒரு பெண் குழந்தையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான சில சட்டங்களைக் கோருதல்.
8. பாலியல் பற்றிய அறிவை வழங்குவது மற்றும் திருமணங்களுடன் வருகின்ற பொறுப்புகளை ஒருவர் உணர்கின்ற வரை, திருமணத்தை தொடர்ந்து தள்ளிவைப்பது.