This Article is From Jul 26, 2018

பசிக் கொடுமையை வெளிச்சமிட்ட படங்கள் - எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட புகைப்படக்காரர்

கிராமத்து மக்கள் தட்டு நிறைய உணவுப்பொருட்களின் முன்பு நிற்பதாக, இந்தியாவில் பசிக்கொடுமை குறித்து வெளியான புகைப்படங்களுக்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

பசிக் கொடுமையை வெளிச்சமிட்ட படங்கள் -  எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட புகைப்படக்காரர்
London:

கிராமத்து மக்கள் தட்டு நிறைய உணவுப்பொருட்களின் முன்பு நிற்பதாக, இந்தியாவில் பசிக்கொடுமை குறித்து வெளியான புகைப்படங்களுக்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘பிறரின் ஏழ்மையைப் பண்டமாக்கி விற்கும் இச்செயலை “Poverty PORN” என்று சாடி வருகின்றனர்.

இத்தாலிய புகைப்படக் கலைஞர் அலெஸ்சியோ மாமொ எடுத்த இப்புகைப்படங்களில் சிறுவர்கள் பொய்யான உணவு முன்பு கண்ணை மூடிக் கொண்டு நிற்கின்றனர் . WORLD PRESS PHOTO FOUNDATION என்னும் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படங்களை வெளியிட்டதும் அவை வைரலாகின.

dreaming food என்னும் இத்தொடர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து மாமோ மன்னிப்புக்கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

e8mih7q8

”இது கொஞ்சமும் பொறுப்பற்ற செயல். பசியைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன. இப்படி மனிதர்களின் மரியாதையைப் பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. தம்மைப் போல் பிறரையும் எண்ண வேண்டும். ஏழை மக்கள் ஒன்றும் (உங்கள் வசதிக்குப் பயன்படுத்திக்கொள்ள) பொருட்கள் அல்ல” என்று இன்ஸ்டாகிராமில் ஒருவர் விமர்சித்துள்ளார்.

வேறு சிலர் மக்களிடையே அதிர்ச்சியூட்டவும் அவர்களை இது குறித்து சிந்திக்க வைக்கவும் இது தேவையாகிறது என்று இந்தப் படங்களை ஆதரிக்கவும் செய்தனர்.

“உணவை வீணாக்க்குவதை குறித்து மேற்கத்திய உலகைச் சிந்திக்கத் தூண்டுவதற்காகவே இப்படங்களை நான் எடுத்தேன். வேறு தவறான நோக்கம் கிடையாது. நான் செய்த விதம் தவறாக இருக்கலாம். ஆனால் அம்மக்களோடு நேர்மையோடும் மரியாதையோடும் பழகி நல்ல நோக்கத்துடன் தான் செயல்பட்டேன்” என 2011-ல் உத்திர பிரதேசத்திலும் மத்திய பிரதேசத்திலும் எடுக்கப்பட்ட இப்படங்கள் குறித்து மாமோ தெரிவித்துள்ளார். 
 

su47q5j8

படங்களை வெளியிட்டதால் விமர்சனத்துக்கு உள்ளான பிரபல அமைப்பான World Press Photo, “எந்தப் புகைப்படங்களைப் பதிவேற்றுவது என்பதைப் புகைப்படக்காரர்களே முடிவு செய்கின்றனர்.” என்று விளக்கமளித்துள்ளது. 
 

bgeo7hmc

இந்தியாவில் தினசரி 194 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பதும், இது தொடர்பான 119 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் பின்தங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.