This Article is From Mar 20, 2019

உலக சிட்டுக்குருவிகள் தினம்: பாதுகாக்கப்பட வேண்டிய பறவை சிட்டுக்குருவி

முதலமைச்சர் ஷீலா தீக்‌ஷித் சிட்டுக் குருவியை ‘மாநிலப் பறவையாக’ அறிவித்தார்.

உலக சிட்டுக்குருவிகள் தினம்: பாதுகாக்கப்பட வேண்டிய பறவை சிட்டுக்குருவி

காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட கட்டடங்கள் குருவிகளுக்கு இடமில்லாத சூழலை உருவாக்கி விட்டது

New Delhi:

இன்று உலக சிட்டுக்குருவி தினம், பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் பறவை பார்வையாளார்கள் வெகுவாக குறைந்து கொண்டே வரும் சிட்டுக்குருவிகளின் மீது அக்கறை செலுத்தி வருகின்றனர். நகர்ப்புறங்களில் காணப்படும் பொதுவான பறவை இனங்கள் மத்தியில் கடந்த பத்து வருடங்களில் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை விகிதம் சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் உள்ள சேரிப்பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் ஷீலா தீக்‌ஷித் சிட்டுக் குருவியை ‘மாநிலப் பறவையாக' அறிவித்தார். சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

house sparrow

உலக ஸ்பார்ரோ தினம் 2010 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டது. காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட கட்டடங்கள் குருவிகளுக்கு இடமில்லாத சூழலை உருவாக்கி விட்டது.

இந்தியாவின் நேச்சர் ஃபாரெவர் சொஸைட்டி பல நிறுவனங்களுடன் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி பறவையினங்கள் அழிவிலிருந்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.

.