World Tourism Day: வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தன் மாநிலத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து ட்வீட் செய்துள்ளார்.
New Delhi: உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. 1970 ஆம் ஆண்டு முதல் உலக சுற்றுலா அமைப்பு இந்நாளை தேர்ந்தெடுத்து கொண்டாடி வருகிறது.
இந்த நாளில் இந்தியத் தலைவர்கள் இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தையும் ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளனர். பல்வேறு மாநிலஙகளின் முதலமைச்சர்களும் மக்களை தங்கள் மாநிலங்களுக்கு சுற்றுலாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, உலக சுற்றுலா தினத்தினை “சுற்றுலா மற்றும் வேலைகள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஏற்படுகிறது. உலக சுற்றுலா தினத்தன்று நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு வருகை தருமாறு இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.
“#WorldTourismDay2019 அன்று, இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரித்யத்தை புரிந்து கொள்ள நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு செல்லுமாறு இளைஞர்களை அழைக்கிறேன். பயணம் பல விஷயங்களை கற்பிக்கிறது. இது உலகின் பல்வேறு கலாசாரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
“இந்திய வரலாறு, கலாசாரம், புராணம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல இயற்கையான மற்றும் புனித தலங்கள் இந்தியாவில் உள்ளன. நினைவுச் சின்னங்கள், வரலாற்று இடங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களுக்கு மாணவர்களின் வருகைக்கான ஏற்பாடு செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டார்” என்று அவர் மேலும் கூறினார்.
திரிபுராவின் முதல்வரான பிப்லாப் குமார் தேவ் அனைவரையும் தனது மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். “வடகிழக்கின் மறைக்கப்பட்ட ரத்தினமான திரிபுராவை பார்வையிட அழைக்கிறேன்! பாரம்பரிய மற்றும் கலாச்சார பாரம்பரியம், பசுமை, கம்பீரமான கட்டிடக் கலைகள், வானத்தை தொடும் மலைகள், பழங்குடியினர் மற்றும் உங்களை மெய்மறக்க வைக்கும் உணவு வகைகள்” உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
தன் மாநிலத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் தன் மாநிலத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்து ட்வீட் செய்துள்ளார்.