சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
New Delhi: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உறைய வைக்கும் பனிப்பிரதேசங்களில் இந்திய ராணுவத்தினர் யோகா செய்து ஆச்சர்யம் அளித்தனர். குறிப்பாக வடக்கு லடாக் பகுதியில் இந்திய துணை ராணுவத்தின் சார்பாக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் இந்தோ - திபெத் படையினர் பங்கேற்றனர். வடக்கு லடாக் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மைனஸ் 20 டிகிரியில் பனி உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.
இதேபோன்று அருணாசல பிரதேசத்தில் உள்ள லோகித்பூரிலும் இந்தோ திபெத் துணை ராணுவம் சார்பாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரம்அடி உயரத்தில் உள்ளது. இங்கு மைனஸ் 10 டிகிரி குளிர் நிலவுகிறது.
சிக்கிம்மாநிலம் டோர்ஜிலாவில் கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் யோகா பயிற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. இங்கு மைனஸ் 15 டிகிரி குளிர் நிலவுகிறது.
இதேபோன்று அசாதாரண நிலப்பரப்பில் இந்திய ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளை இன்று மேற்கொண்டனர்.