மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
New Delhi: உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் பிரமாண்டா யோகா விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோன்றிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரவி பயன் அளித்து வருகிறது. ஏராளமான வெளிநாடுகளில் மக்கள் இதனை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், மற்ற மருத்துவத்தால் குணப்படுத்தாத பிரச்னைகளுக்கும் யோகா தீர்வாக அமைகிறது. இதனை மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக அளவில், இந்தியாவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து ஜூன் 21-ம்தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. அங்கீகரித்துள்ளது.
இந்த நிலையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மத்திய அரசு சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இந்திய தூதரங்கள் சார்பாக விழாக்கள் நடத்தப்படும்.
இந்தியாவில் மாவட்டம் வாரியாக அனைத்து பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல், திரையுலக, விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோரும் நாளை நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சிகிளல் பங்கேற்கின்றனர்.