This Article is From Jun 21, 2019

''இந்திய கலாசாரத்தின் அடையாளம் யோகா'' : நிதின் கட்கரி

உலக யோகா தினத்தை முன்னிட்டு நாக்பூர் யஷ்வந்த் மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.

''இந்திய கலாசாரத்தின் அடையாளம் யோகா'' : நிதின் கட்கரி

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nagpur:

இந்திய கலாசாரத்தின் அடையாளம் யோகா என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவின் வலியுறுத்தலை தொடர்ந்து ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. 

இதையொட்டி இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளில் இந்திய தூதரகங்கள் சார்பாகவும் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதேபோன்று வெவ்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள யஷ்வந்த் மைதானத்தில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்கரி, 'இந்திய கலாசாரம், வரலாறு, பண்பாட்டின் அடையாளமாக இருப்பது யோகா. நாடு முழுவதும் யோகா. இதனை உலகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு யோகா ஒவ்வொரு மனிதருக்கும் அவசியம்.'' என்றார்.

.