Read in English
This Article is From Oct 12, 2018

உலகின் அதிக எடையுள்ள கர்பப்பை கட்டியை நீக்கி தமிழக மருத்துவர்கள் சாதனை!

33.5 கிலோ எடையுள்ள கர்பப்பை புற்றுநோய் கட்டியை கோயம்புத்தூர் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளார்கள்.

Advertisement
தெற்கு (with inputs from ANI)
Coimbatore (Tamil Nadu):

ஊட்டியைச் சேர்ந்ந்த வேளாண் தொழிலாளி வசந்தா. புற்றுநோய் கட்டியின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வந்த உடல் எடையை அவர் கவனிக்கவில்லை. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் எடை அதிகரித்து வருவதாக அவர் எண்ணிணார். புற்றுநோய் கட்டியினால், அவருக்கு எந்த விதமான உடல் உபாதையும் ஏற்படவில்லை. வயிற்றின் அளவு மட்டும் பெரிதாகிக் கொண்டே இருந்தது. இதனால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர்கள் வயிற்றிலிருந்த புற்றுநோய் கட்டியை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். அதற்கு வசந்த மறுப்பு தெரிவித்தார்.

வசந்தாவின் கணவரிடம், கோயம்புத்தூர் மருத்துவமனையை பரிந்துரை செய்துள்ளார். அந்த மருத்துவமனையின் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். செந்தில் குமார் மற்றும் அவரது குழுவினர் வசந்தாவின் புற்றுநோய் கட்டியை குறித்து ஆலோசனை செய்து, அதனை நீக்க முடிவு செய்தனர். இது குறித்து அவர் கூறுகையில், உலகின் அதிக எடையுள்ள புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கியது இதுவே முதல் முறை என்று கூறியுள்ளார்.

மேலும் டாக்டர். செந்தில் குமார் ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில், வசந்தா முதன்முறையாக பரிசோதனைக்கு வந்தபோது 75 கிலோ எடை இருந்தார். 33.5 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டியை நீக்கியபின் தற்போது 42கிலோ எடையுடன் நலமுடன் இருக்கிறார் என்று கூறினார்.

Advertisement

இதுவரை இந்தியாவில் அதிக எடையுள்ள புற்றுநோய் கட்டி (20கிலோ) அறுவை சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. தற்போது எங்கள் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளோம். எங்களது இந்த சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. மேலும், வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டிலும் எங்கள் சாதனை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

Advertisement