Read in English
This Article is From Nov 24, 2018

உலகின் மிக வயதான கன்னியாஸ்திரி சீசிலியா மரியா ரோஸாக் மரணமடைந்தார்

நாசிகளிடமிருந்து ஜுக்களை காப்பாற்றிய கன்னியாஸ்தரி ரோஸாக் 110 வயதில் மரணமடைந்தார்

Advertisement
உலகம்
Warsaw, Poland:

நாசிகளிடமிருந்து ஜுக்களை காப்பாற்றிய கன்னியாஸ்தரி ரோஸாக் 110 வயதில் மரணமடைந்தார்.

போலாந்தை சேர்ந்த சகோதரி சீசிலியா மரியா ரோஸாக், இரண்டாம் உலகப் போரில் நாசிகளால் தாக்கப்பட்ட ஜூக்களை மீட்டு அவர்களைத் தான் உருவாக்கிய கான்வென்டில் அனுமதித்து அவர்களை காப்பாற்றியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் பல ஜூக்களின் உயிர்களை காப்பாற்றியதற்காக “ரைட்டியஸ் அமங் தீ நேஷன்ஸ்” என்னும் விருதை இஸ்ரேல் அரசு சகோதரி ரோஸாக்கு வழங்கியது.

அது மட்டுமில்லாமல் கிறிஸ்துவ ஆலயங்களில் பாடுவது மற்றும் இதர பணிகளை செய்வது என எல்லா இறைப்பணிகளையும் அவர் செய்துள்ளார்.

Advertisement

1908-ல் பிறந்த சகோதரி ரோஸாக் 1934 ஆம் ஆண்டில் தனது கன்னியாஸ்தரி வாழ்வை ஏற்றுக்கொண்டார், சில காலத்திற்கு முன் ‘வாழ்க்கை மிக அழகான ஒன்று ஆனால் நாம் வாழும் காலம் மிகவும் குறைவு' என வருந்தியது உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement