இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களை சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால்.
போர்னியாவில் உள்ள மழைக் காடுகளில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் விடபட்டது ‘அல்பா' என்னும் அல்பினோ மனிதக்குரங்கு. மனிதர்களுக்குத் தெரிந்து இந்த வகை குரங்கில் இது ஒன்றுதான் தற்போது உலகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட அரிய உயிரினம் தற்போது மீண்டும் கண்ணில் பட்டுள்ளது. இது பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீல நிற கண்களும், வெள்ளை முடியுமென வித்தியாசமாக இருந்தாள் அல்பா. அவளை இந்தோனேசியாவில் உள்ள கிராமத்தினர் சிலர் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தனர். 2017 ஆம் ஆண்டு அவளைக் கூண்டிலிருந்து விடுவித்து, 2018 ஆம் ஆண்டு காட்டிலேயே மீண்டும் விட்டுவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் அல்பா தென்பட்டுள்ளதாக போர்னியா மனிதக் குரங்கு அமைப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
போர்னியா மழைக் காடுகள், காடழிப்பு, பாமாயில் எடுத்தல் மற்றும் சுரங்கப் பணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல உயிரினங்கள் அழிந்துள்ளன. அப்படி இருக்கையில் அல்பாவின் மீட்பு பெரும் உற்சாகத்தைப் பலருக்கு வரவழைத்தது.
இந்த அல்பினோ மனிதக் குரங்கை, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் தாக்குவதுண்டு. காரணம், அவை பயிர்களைச் சேதம் செய்துவிடும் என்னும் அச்சத்தால். கடத்தல்காரர்களோ, அல்பினோ மனிதக் குரங்கைப் பிடித்து வளர்ப்புப் பிராணிகள் சந்தையில் விற்பதுண்டு.
Click for more
trending news