41 அடி 8 இன்ச் உயரத்தில் கப்கேக்குகள் மூலம் டவர் கட்டப்பட்டது.
சென்னையில் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கப்கேக் மூலம் கட்டப்பட்ட பெரிய டவர் என்ற கின்னஸ் சாதனை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் நிகழ்த்தப்பட்டது.
ப்ரீத்தி கிச்சன் நிறுவனம் சார்பாக இது நிகழ்த்தப்பட்டது. 18,818 கப்கேக் மூலம் 41 அடி 8 இன்ச் உயரத்தில் டவர் கட்டப்பட்டது.
கப்கேக்குகள் அந்த நேரத்தில் மாலில் தயாரிக்கப்பட்டது.
‘ஒவ்வொரு கப்கேக்கும் 70 கிராம் எடையுடனும் டவர் கட்ட உபயோகிக்கப்பட்ட கப்கேக்களின் மொத்த எடை 1.3 டன்னாகவும் இருந்தது' என கின்னஸ் சாதனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின் அந்த கப்கேக்குகள் NGO களுக்கு வழங்கப்பட்டது.
Click for more
trending news