Read in English
This Article is From Jun 19, 2019

அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்குப்பதிவு இயந்திரம் பற்றியதாக இருந்தால் கலந்துகொண்டிருப்பேன்; மாயாவதி!

வறுமை, வேலைவாய்ப்பின்மை, அதிகரிக்கும் வன்முறைகள் என அனைத்து பிரச்சினைகளிலும் இருந்தும் மக்களை திசை திருப்பும் முயற்சியாகவே ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து விவாதிக்கப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என மாயாவதி தெரிவித்துள்ளார்.

Lucknow:

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டதில், தான் பங்கேற்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு இயந்திரம் குறித்த கூட்டமாக இருந்தால் தான் பங்கேற்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ஒரே நேரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் யோசனை என்பது, வறுமை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியே என்று அவர் கூறியுள்ளார். 

150வது மகாத்மா காந்தி பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாகவும், 2022ல் சுதந்திரம் பெற்று 75 வருடத்தை எட்ட உள்ளதை கொண்டாடும் விதமாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

வாக்குப்பதிவு இயந்திரம் மீதான மக்களின் நம்பிக்கை மிகவும் குறைந்துள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதை விடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தேர்தலை நடத்துவதில் பிடிவாதமாக இருப்பது என்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானது என்று அவர் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5வது பொதுக்கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக நிதி ஆயோக் கூட்டமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

இந்த கூட்டத்தில், மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. மேலும், மாநிலத்திற்கு எந்த நிதி பலனையும் நிதி ஆயோக் தராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.


 

Advertisement