Read in English
This Article is From Oct 23, 2018

‘ரத்தம் வடியும் பேட் உடன் நண்பர் வீட்டுக்குச் செல்வீர்களா?’- ஸ்மிருதி இராணி

அமைச்சர் இராணியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு வந்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement
இந்தியா

சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வந்துள்ளது.

New Delhi:

சபரிமலை விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கருத்து கூறியுள்ளார். அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு வந்துள்ளது. 

உச்ச நீதிமன்றம், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் போகலாம் என்று தீர்ப்பளித்தப் பிறகு அக்டோபர் 18 ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணிக்கு கோயில் நடை பூஜைகளுக்குப் பின் மூடப்பட்டது. 6 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நடை சாத்தப்பட்டது. இந்த 5 நாட்களில் 10 முதல் 50 வயதுகுட்பட்ட 9 பெண்கள், கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால், பக்தர்களின் தொடர் எதிர்ப்பால் அவர்களில் யாருமே ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. 

சபரிமலை விவகாரம் குறித்து தொடர்ந்து இரு வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து என்னால் எந்த வித கருத்தும் கூற முடியாது. அதே நேரத்தில் வழிபடுவதற்கான உரிமை எனக்கு உள்ளது. வழிபடுவதை அவமதிக்கும் உரிமை எனக்கு இல்லை. 
 

ஒரு அடிப்படை அறிவுடன் சபரிமலை விவகாரத்தைப் பாருங்கள். ரத்தம் வடியும் ஒரு பேட் உடன் உங்கள் நண்பர் வீட்டிற்குச் செல்வீர்களா? பிறகு ஏன் அதை கடவுளின் இல்லத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள்?' என்று பேசியுள்ளார். 

அமைச்சர் இராணியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு வந்த வண்ணம் இருக்கின்றன.

Advertisement
Advertisement