வைரஸ் பாதிப்பு காரணமாக சீனா பல்வேறு பகுதிக்கும் பயண தடை விதித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- All of the new deaths took place in the provincial capital of Wuhan
- Wuhan and 13 other cities in the province have been locked down
- The previously unknown virus has caused global concern
Wuhan: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரானோ வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையானது 41 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உயிரிழப்பானது 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் வுஹான் பகுதியில் தான் அதிகமாக நடந்து வருகிறது. இந்த பகுதியிலே வைரஸ் அறிகுறி முதலில் தென்பட்டது என ஹூபே சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மற்றும் மற்ற நாடுகளுக்கும் பரவும் கொடிய சுவாச தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் விதமாக வுஹான் உள்ளிட்ட 13 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.
மேலும், வைரஸ் பாதிப்பு காரணமாக புதிதாக 180 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 77 பேர் வுஹான் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த நகரங்களில் பல நோய்க்கிருமிகளின் முதல் நிகழ்வுகள் குறித்து - 2019 நாவல் கொரோனா வைரஸ் (2019-nCoV) அறிக்கை அளித்துள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 830 பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது.
முன்னதாக 2002-2003 ஆம் ஆண்டில் அறியப்படாத வைரஸ் ஒன்று சீனா மற்றும் ஹாங்காங்கின் பிரதான நிலப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது. இந்த வைரஸ் பாதிப்பிற்கும் தற்போதைய பாதிப்பிற்கும் ஒற்றுமை இருப்பதால் உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.