This Article is From Mar 09, 2020

'எஸ் வங்கி மோசடி' - நிறுவனர் ராணா கபூர் அதிரடி கைது

வங்கிக் கணக்குகள் குறித்தும் ED ஆராய்ந்து வருவதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது

அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
  • (பி.எம்.எல்.ஏ) கீழ் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
  • YES வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்
Mumbai:

தற்போது மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வரும் YES வங்கியின் நிறுவனர் ராணா கபூர், வங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த இரண்டு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் அமலாக்க இயக்குநகரத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கி ஒவ்வொரு YES வங்கி பயனருக்கும் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு ரூ. 50,000 மட்டுமே பரிவர்த்தனை செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளது. 

கபூர் கடந்த சனிக்கிழமையன்று மும்பையில் உள்ள அமலாக்க இயக்குநரகம் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக, மும்பையில் உள்ள சமுத்ரா மஹால் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நிறுவனம் தீவிர சோதனை நடத்தியது, மற்றும் அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஒரு ட்வீட்டில், YES வங்கி தனது வாடிக்கையாளர்கள் இப்போது ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்று கூறினார். "நீங்கள் இப்போது உங்கள் வங்கி டெபிட் கார்டைப் பயன்படுத்தி YES வங்கி மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம். உங்கள் பொறுமைக்கு நன்றி" என்று அந்த  ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கி வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால் YES வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பணப் பரிவர்த்தனை குறித்த இணையப் பயன்பாட்டிற்கும், யுபிஐ வழியாகப் பணம் செலுத்துவதற்கும், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

n1l7lnu8

நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கடன்களைச் செலுத்துவதற்கும், சம்பளம் வழங்குவதற்கும் மிகவும் சிரமப்படுவதாகப் புகார் அளித்துள்ளார். மேலும் ஹோலி பண்டிகை விரைவில் வரவிருக்கும் இந்த நேரத்தில் இப்படி நடந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

YES வங்கி நிறுவனர் சில நிறுவனங்களுக்கு வழங்கி கடனை குறித்தும், அவரது மனைவி வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்தும் ED ஆராய்ந்து வருவதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேசத்தின் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மோசடி (ஈபிஎஃப்) தொடர்பான ஒரு விஷயமும் தற்போது ஆராயப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

உத்தரப்பிரதேசத்தில் மின் துறை ஊழியர்களின் கடின உழைப்பால் சேமிக்கப்பட்ட பணம் அனைத்தும் DHFL-ல் 
முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 2,267 கோடி ரூபாய் ஈபிஎஃப் மோசடி குறித்து சிபிஐ சமீபத்தில் விசாரணை நடத்தியது நினைவுகூரத்தக்கது.  

.