ராணா கபூரை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ED கைது செய்தது.
ஹைலைட்ஸ்
- Enforcement Directorate arrested Rana Kapoor early on Sunday
- CBI filed a separate case against him for corruption
- His lawyer Zain Shroff told the court he had been made "a scapegoat"
New Delhi: நெருக்கடி பாதித்த யெஸ் வங்கியின் நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குநருமான 62 வயதான ராணா கபூர், பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவர் அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணைக்கு அனுப்பப்பட்டார். மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ) ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் மீது தனி வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவரது மகள்களின் இல்லங்களில் பல மணி நேர விசாரணை மற்றும் சோதனைக்குப் பிறகு, ராணா கபூரை அமலாக்க இயக்குநரகம் (ED) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தது.
அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கறிஞர் சுனில் கோன்சால்வ்ஸ் ஒரு மணி நேர விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட மொத்த தொகையானது ரூ .4,300 கோடி என்றும், ராணா கபூர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
அமலாக்க இயக்குநரகத்தின் குற்றச்சாட்டினை ராணா கபூர் மறுத்தார். "நான் அவர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறேன்," என்று அவர் கண்ணீருடன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். "நான் ஓய்வெடுக்கவிட்டாலும் கூட இரவும் பகலும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்." என்றும் ராணா கபூர் தெரிவித்திருந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியைத் தற்காலிகமாக நிறுத்தி, அதன் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ரூ .50,000 வரம்பை விதித்ததை அடுத்து, யெஸ் வங்கிக்கு எதிரான பொதுமக்கள் சீற்றம் கொண்டுள்ளதாகவும், எனவே தனது வாடிக்கையாளர் "பலிகடாவாக" மாற்றப்பட்டதாகவும் ராணா கபூரின் வழக்கறிஞர் ஜெய்ன் ஷிராஃப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதிகரித்து வந்த வராக்கடன் எண்ணிக்கையால் ஒழுங்குமுறை தேவைகளுக்கு மேல் இருக்க வேண்டிய மூலதனத்தினை திரட்ட முடியாமல் திணறியது. இதன் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை ரிசர்வ் வங்கியானது யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டினை எடுத்துக்கொண்டது. யெஸ் வங்கியின் 49 சதவிகித பங்குகளை நிதி முதலீடு செய்யப்போவதாக எஸ்.பி.ஐ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், திவாலான திவான் ஹவுசிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு யெஸ் வங்கிக் கடன் வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திவான் ஹவுசிங், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த மூன்றாவது குறிப்பிடத்தக்க இந்திய நிதி நிறுவனம் யெஸ் வங்கி ஆகும்.
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில், சிபிஐ தயாரித்த முதல் தகவல் அறிக்கையிலிருந்து, அமலாக்க இயக்குநரகம் வழக்கறிஞர், “யெஸ் வங்கி ரூ .3,700 கோடி மதிப்புள்ள திவான் ஹவுசிங்கின் கடன் பத்திரங்களை வாங்கியதாக” குற்றம் சாட்டியுள்ளது. இது ஒரு நிறுவனத்திற்கு ரூ .600 கோடி கடன் வழங்கியது என்றும் அது ராணா கபூரின் மூன்று மகள்கள் ரோஷ்னி கபூர், ராக்கி கபூர் டாண்டன் மற்றும் ராதா கபூருக்கு சொந்தமான டொயிட் என்கிற நிறுவனம்தான் என்றும் அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்தது.
டொயிட்டிற்கான கடன் ஒரு முறைகேடு என அமலாக்க இயக்குநரகம் நம்புகிறதாக வழக்கறிஞர் கூறியிருந்தனர். கபூர் மற்றும் அவரது வழக்கறிஞர்கள், “கடனீடுகள் AAA என மதிப்பிடப்பட்டதாகவும், டொயிட் சரியான நேரத்தில் கடனைச் பயன்படுத்தியதாகவும்” கூறியிருந்தனர்.
அமலாக்க இயக்குநரக வழக்கறிஞரும், டொய்ட்டுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ .700 கோடிக்கும் அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால், சொத்துகளின் உண்மையான மதிப்பு வெறும் ரூ .40 கோடி என்றும் கூறினார்.
சிபிஐ தனது எஃப்.ஐ.ஆரில் முறைகேடுகளை மேற்கோள் காட்டி, ராணா கபூர், திவான் ஹவுசிங் மற்றும் டொயிட் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சதி, மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதல் தகவல் அறிக்கையைத் தயாரித்திருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனையிடுவதற்காகவும் ராணா கபூர் மற்றும் பிறரை விசாரிப்பதற்காகவும் மும்பைக்குப் புறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அமலாக்க இயக்குநகரதத்திற்குப் பிறகு சிபிஜ அவரைக் காவலில் எடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.